மாபியாக்களின் திட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
தன்னை அரசியல் ரீதியான அழிக்கும் செயற்பாடுகளை மாபியாக்கள் திட்டமிட்டு மேற்கொள்வதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (08.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை திட்டமிட்ட செயற்பாடு என்பதோடு குறித்த சம்பவத்துடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
அச்சுறுத்தல்
பொலநறுவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 69 இலட்சம் மண் அனுமதிப்பத்திரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பெற்றிருந்த நிலையில் அவை என்னால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவற்றினை மீள வழங்குமாறு எனக்கு பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதிலும் அதற்கு நான் உடன்படாத நிலையிலேயே தனது செயலாளரை இவ்வாறான நிலைக்கு கொண்டுசென்று தன்னை அச்சுறுத்த முனைகின்றனர். எவ்வாறான அச்சுறுத்தலுக்கும் தான் அடிபணியப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
