மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்: புதிய நகர்வுக்கு தயாராகும் விமல் தரப்பு
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், திலித் ஜயவீரவே முன்மொழியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
08 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதன்படி நாளை மறுதினம் 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியன் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, காமினி வலேபொட, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
