மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக அமைச்சர் வியாழேந்திரன் நியமனம் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான நியமனத்தினை வழங்கியுள்ளார்.
அபிவிருத்திக்குழு தலைவர்
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு,போரதீவுப்பற்று உட்பட சில பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



