அமைச்சுப் பதவியில் உள்ளவர்கள் மாவட்ட வளங்களை சுரண்டுகின்றனர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)
அமைச்சுப்பதவியில் உள்ளவர்கள் தமிழ்மக்களுக்கு அபிவிருத்தியையும் செய்யவில்லை, உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை, மாவட்டத்தின் வளங்கள் சுரண்டுவதில் கவனம் செலுத்தினர் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.11.2023) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 சதவீதம் தண்ணீர் வசதி வழங்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நீர்வழங்கல் நடவடிக்கை
200 மில்லியன் நிதி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதிக்கான நீர்வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசசபையின் வளங்களைப் பயன்படுத்தி நிர்க்குழாய்களை பொருத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோர் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



