எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விவேக் ராமசாமி விருப்பம்
அடுத்தாண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ஆதரவு
இந்நிலையில், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் தனது சமூக ஊடக பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த விவேக் ராமசாமி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரச நிர்வாகத்திற்கு வழிகாட்ட கொண்டு வர விரும்புகிறேன்.
சமீபகாலமாக, எலான் மஸ்க்கை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். டுவிட்டரில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.
டுவிட்டரில் அவர் செய்த செயல், நிர்வாக ரீதியாக அரசியல் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
