மூதூர் தள வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை! பிரதியமைச்சரின் விஜயம்
மூதூர் தள வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கும், அங்கு நிலவும் அவசியமான தேவைகளை கேட்டறிவதற்குமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் ஏனைய பிரிவுகளுக்குச் சென்ற பிரதியமைச்சர், அங்குள்ள அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின் தரம் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
வைத்தியசாலை தேவைப்பாடுகள் தொடர்பான மேலதிக விபரங்கள்
வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் சிற்றூழியர்களுடன் கலந்துரையாடிய அவர், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
வளப் பற்றாக்குறைக்கு தீர்வு வைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறைகள் குறித்து இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர்,
மூதூர் தள வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி வெற்றிடங்கள் மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகளை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலியுறுத்தினார்.
மேலும் எதிர்காலத்தில் இப்பகுதி மக்கள் நவீன வசதிகளுடன் கூடிய வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மூதூர் தொகுதி அமைப்பாளர் சப்ரான், பிரஜா சக்தி குழுவினர், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக நிலவி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நேரடி விஜயம், மூதூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு அமைச்சர் காட்டிய அக்கறைக்காக வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam