குடு சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் கைது! முதற்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்த போது இன்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் வெளியான தகவல்
சந்தேகநபர்கள் இருவரும் குறித்த பகுதியில் தங்கியிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெத்தா என்ற பெத்தும் மற்றும் கவியா என்ற கவிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெத்தும் என்பவரிடமிருந்து 42,350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், கவிந்து என்பவரிடமிருந்து 48,170 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam