ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன.
அதேநேரம் நிலை சீரானதும் மீண்டும் சேவை வழங்கப்படும் என மாஸ்டர்கார்டு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri