அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
புதிய இணைப்பு
அம்பலாங்கொடையில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’ என்ற நபரின் மூத்த சகோதரியின் கணவர் இந்த முறையில் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஒரு நகர சபை உறுப்பினர் அல்ல, ஒரு தொழிலதிபர் என்று இலங்கை பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஃப்.யு. வூட்லர் கூறுகையில், கடல் உணவு வர்த்தகரான தொழிலதிபர், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவப்பு நிற வாகனத்தில் வந்த ஒரு குழுவால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு, உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
முதலாம் இணைப்பு
அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (04.11.2025) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam