பிள்ளையானின் அழைப்பால் தடுமாறும் இளைஞன்: வைரலாகும் குரல்(Video)
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை அக்கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அச்சுறுத்தும் குரல் பதிவானது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறித்த நபர் கிழக்கு மாகாண மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வரும் நிலையிலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காணி விவகாரம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் குறித்த உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது கட்சி சார்ந்த அரசியல் விவகாரங்களின் தலையீடுகளை தவிர்க்குமாறு சிவனேசத்துரை சந்திரகாந்தனினால் குறித்த நபர் அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.