இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கிய காட்டுப் பூனை
இஸ்ரேல் – எகிப்து எல்லைக்கு அருகே, மவுண்ட் ஹரிஃப் பகுதியில், எகிப்திய காட்டுப் பூனைகள்(Egyptian Lynx) பல இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பல வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த விலங்கு எவ்வாறு எல்லையைக் கடந்து தாக்குதலைத் தொடங்கியது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Lynx காட்டுப்பூனை
எகிப்திற்கும் – இஸ்ரேலிற்கும் இடையில் உள்ள முக்கிய எல்லைப்பகுதியான மௌன்ட் ஹரீப் பகுதியில் கடைமையிலிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களை திடிரென வந்த Lynx எனப்படும் ஒரு வகை காட்டுப்பூனைகள் ஆக்ரோஷமாக தாக்கியதில் பல இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இதில் பிடிக்கப்பட்ட ஒரு விலங்கு வனஜீவராசிகள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
