மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவம்!
மன்னார் நகரசபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று(24) மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம்பெற்ற பின்னர் இரு நபர்கள் இணைந்து ஒரு நபரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்த காயங்களுடன் மன்னார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
தாக்குதல்
நேற்றைய தினம் (24) மன்னார் நகர சபை தலைவர்,உப தலைவர் தெரிவு நிறைவடைந்த நிலையில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் மன்னார் நகரசபை முன்பகுதியில் நிறைந்திருந்த நிலையில் நபர் ஒருவரை அழைத்து இருவர் உரையாடி இருந்தனர்.
@lankasrinews மன்னார் நகரசபைத் தேர்தல் பின்னணியில் வன்முறை! #news #srilankapolice #srilanka #latestnewsupdates #viral #latestnews #jaffna #jaffnanews #breakingnews #mannar #police ♬ original sound - Lankasri News
குறித்த உரையாடல் கைகலப்பாக மாறி இரு நபர்களும் இணைந்து மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த நபர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருந்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இருப்பினும் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
