மலையகத்தில் தொடரும் வன்முறை.. பொது பாதுகாப்பு அமைச்சர் மேற்கொள்ளவுள்ள முக்கிய கலந்துரையாடல்
தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பான பல்துறை அவசர மாநாட்டை எதிர்வரும் புதன்கிழமை நடத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இணக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர், மனோகணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் மனோ கணேசன், பொது பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இது தொடர்பில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், பொலிஸ் பிரிவு உயரதிகாரிகள், தோட்ட நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை உடனடியாக கூட்டுமாறு கோரியிருந்தார்.
இந்த மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளும் சிவில் செயற்பாட்டாளர்களும் பங்கேற்று, தோட்டப் பகுதிகளில் தொடரும் வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.