சீரற்ற காலநிலையால் பெரும் அவதியுறும் மலையக மக்கள்..! அதிகாரிகளிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில், ஹட்டன் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
நேற்று(15.05.2026) ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து கடும் மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் அவதியுறும் மக்கள்
கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பெண்கள், முதியவர்கள் என பலரும் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அன்றாடம் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இது குறித்த உரிய அதிகாரிகளை தெளிவுப்படுத்திய போதிலும் சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
