யாழில் அதிகரிக்கும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்: காரணத்தை வெளியிட்ட யாழ்.பொலிஸ் மா அதிபர்
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் பெற்றோர்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் வன்முறைகள் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் இன்றைய தினம் (04.06.2023) யாழ். சங்கானை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகவே உள்ளன. வன்முறைகளில் இருந்து அவர்களை, நாங்கள் காப்பற்ற முடியும்.
கண்காணிப்பு - அக்கறை இன்மை
வன்முறைச் சம்பவங்களை நாங்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்த போது, அவற்றில் 80 வீதமானவை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், அக்கறையின்மையானாலுமே இடம்பெற்றுள்ளன.
இவற்றைத் தடுப்பதில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
சட்டத்தை உருவாக்குபவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பங்குண்டு.
அத்துடன் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே நாம் அனைவரும் ஒன்றாகி ஒளியேற்ற முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
