தேர்தல் சட்டத்தை மீறிய28 வேட்பாளர்கள் கைது!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாடு
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும், தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும், 111 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 26 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
