தள்ளுபடி செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் (Vinesh Phogat) மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில், தனக்கு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த வழுக்கு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வினேஷ் போகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம்
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் 50 கிலோ எடைப் பிரிவின் மல்யுத்த போட்டிகளின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸை அபாரமாக வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னதான உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவிற்கு மேலதிகமாக 100 கிராம் எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே, கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிய வினேஷ் போகத்தின் மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 12 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
