ரெலாேவில் இருந்து இடைநிறுத்தப்பட்ட விந்தன் கனகரத்தினம்
தமிழீழவிடுதலை இயக்கத்தின் (ரெலாே) தலைமைக்குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைகுழு தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில்(Vavuniya) அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று( 7) இடம்பெற்ற போது கட்சியின் உள்வீட்டு தகவல்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்து விந்தன் கனகரத்தினம் மீது உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி அவரிடம் இருந்து விளக்கம் கோருவதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளது.
இடைநிறுத்தம்
இதன்பாேது அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் குறித்த தீர்மானத்தையடுத்து விந்தன் கனகரத்தினம் கூட்டத்தில் இடைநடுவில் வெளியேறி சென்றிருந்தார்.

இதேவேளை, கட்சியின் தீர்மானத்தை மீறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளித்தமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் விளக்கம்கோரி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தலைமைகுழு தீர்மானித்துள்ளது.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளரை பெயரிடும் விடயம் தொடர்பாக சுரேன் குருசாமி, சபாகுகதாஸ் ஆகியோரிடமும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri