நீர்த்தேக்கங்களின் மின் உற்பத்தி கொள்ளளவு உயர்வு
நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்று வியாழக்கிழமை (27) காலை முதல் வான் மேவி பாய்கின்றது.
இந்த நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டம் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகபட்ச மட்டத்தில் மின் உற்பத்தி
இதனுடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து, நிரம்பி வழியும் நிலையை நெருங்கி வருவதாக பொறியலாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கெனியன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் மின் உற்பத்தி கொள்ளளவு அதிகபட்ச மட்டத்தில் செயல்படுத்தப்படுவதையும் தெரிவித்துள்ளனர்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam