நுவரெலியா நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கின- போக்குவரத்தும் மட்டுப்படுத்தல்
மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (27) நுவரெலியா நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா புத்த மந்திர மாவத்தை, நுவரெலியா பஸ் நிலையம், ஹவாஎலியா வைத்தியசாலை மாவத்தை உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், பொதுமக்கள் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில், தலவாக்கலை சென்.கிளயார் தோட்டப் பகுதியில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தச் வீதியின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இராகல மற்றும் கந்தபொல பகுதிகளில் கனமழை
இதேவேளை, நுவரெலியா - இராகல மற்றும் கந்தபொல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ராகல–ஹேனகல பகுதியில் உள்ள இரண்டு தொடர்குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் சுமார் 100ற்கும் குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.