ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல்

Ranil Wickremesinghe Wimal Weerawansa Sri Lanka
By Dharu Oct 12, 2023 10:25 PM GMT
Report

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது எனவும், தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் நேற்று (12.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம்

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம்

அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயரவு

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க உலகத்தை வலம் வருகிறார்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன. மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

மின்சார சபை எதிர்கொள்ளும் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்காகவே மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.மின்சார சபையின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் முறையற்ற மின்கட்டண அதிகரிப்பை தடுக்கலாம்.

முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்

முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றம்

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் காலத்துக்கு காலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அதுவும் தற்போது ஸ்திரமற்றதாக காணப்படுகிறது.மக்களின் தேர்தல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் முறைமையை திருத்தியமைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். பெண் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாண சபைத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்தார்.

இறுதியில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறை செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எல்லை நிர்ணயம் புதிதாக வகுக்கப்பட்டது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே.

தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.” என கூறியள்ளார்.

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US