'மகிந்த சூறாவளி' ஆரம்பமான இடத்தில் விமல் அணியின் ஆட்டம் ஆரம்பம்
தெற்கில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila), தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
மகிந்தவின் எழுச்சி
அத்துடன், பெரும்பான்மை தேசிய வாத அமைப்புகளும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளதோடு கோட்டாபய ராஜபக்சவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்தவின் எழுச்சிப் பயணம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
