அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்க விமல் தீர்மானம்
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின் பிரகாரம் 22வது திருத்தச்சட்டம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அதனை ஆதரிக்கத்தயார் என்று விமல் வீரவங்ச அறிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச தலைமையிலான உத்தர லங்கா சபாக எனப்படும் புதிய கட்சியின் ஊடக மாநாடு இன்று கொழும்பு-02 கம்யூனிஸ்ட் கட்சயின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம்
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய சில விடயங்களை உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. அதன் பிரகாரம் குறித்த திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டால் அதனை ஆதரிக்கத் தயார். அதனை விடுத்து தந்திரமான வழியில் வேறு விடயங்களை உள்ளடக்கி திருத்தச்சட்டத்தை முன்வைத்தால் அதனை எதிர்ப்போம்.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தந்திரமான முறையில் 22வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் எந்தக் கட்டத்திலும் இடமளிக்க மாட்டோம்.
நாடாளுமன்ற குழு மட்ட கலந்துரையாடலின் போது தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள திருத்தச் சட்ட வரைபு முன்வைக்கப்படும். அதனைப் பொறுத்தே ஆதரவளிப்பதா? இல்லையா என்பதைத் தீர்மானிக்கவுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri