வீடுகளுக்கு வரும் சிறுத்தை புலிகள்-அச்சத்தில் கிராம மக்கள்
மலை சிறுத்தை புலிகள் இரவு நேரங்களில் தமது வீடுகளுக்கு வருவதன் காரணமாக தாம் கடும் அச்சத்தில் இருப்பதாக தலவாக்கலை, அக்கரபத்தனை புதிய கொலனி கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் சிறுத்தை புலிகள்
இரவு நேரங்களில் வீடுகளுக்கு இந்த சிறுத்தை புலிகள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை வேட்டையாடுவதை பழக்கமாக்கி கொண்டுள்ளன.
இதனால், இரவு முழுவதும் இந்த சிறுத்தைகள் வீடுகளுக்கு அருகில் சுற்றித்திரிக்கின்றன. அக்கரபத்தனை புதிய கொலனி கிராமத்தில் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவில் மிகப் பெரிய சிறுத்தை ஒன்று வீட்டுக்கு வந்து வீட்டின் பின்புற கதவை திறக்க முயற்சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சிறுத்தை பல முறை கதவை திறக்க முயற்சிப்பது காட்சியாக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதேச மக்கள் மத்தியில் இருந்து வந்த சிறுத்தை பயம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், கிராமத்திற்கு அருகில் திரியும் சிறுத்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு கிராம மக்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



