காட்டு யானையின் வருகையால் மின்னேரியா மஹா ரத்மலே கிராம மக்கள் துயரத்தில் உள்ளனர்
மின்னேரியா, மஹா ரத்மலெ கிராம குடியிருப்பு பிரதேசங்களிற்கு யானைகள் வருகை தருவதினால் அப்பிரதேச மக்கள் துயரத்தில் உள்ளனர்.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
தொடர்ந்து சில நாட்களாக இந்த பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. யாருக்கு முறைப்பாடு செய்தும் வேலையில்லை. தென்னை மரங்கள், வாழைமரங்கள் என அனைத்தையும் சாய்த்துவிட்டது.
சிறுவர்களை வெளியே அனுப்ப முடியாமல் உள்ளது. மிகவும் அச்சத்தில் வாழ்கின்றோம். இது பெரிய பிரச்சினையாக உள்ளது. மின்வேலிகளையும் உடைத்துக்கொண்டு இந்த யானை வீடுகளுக்கு வருகின்றது.
இந்த மின் வேலிகளுக்கு மின்சார இணைப்பு இணைக்கப்படவில்லை இணைக்கப்பட்டிருந்தால் யானை இவ்வாறு பாதைக்கு வராது.
தினமும் மாலை 5 மணிக்கு பின்னர் இந்த யானை மின்சார வேலிகளை உடைத்து கொண்டு பாதைக்கு வருகின்றது. காலை 6 மணிக்கு பின்னர் அது வந்த வழியூடாகவே காட்டிற்குள் செல்கின்றது.
இந்த யானைக்கு இது பழக்கமாகிவிட்டது. நாங்கள் கத்தி கூச்சலிட்டாலும் அது கண்டுகொள்வதில்லை.
இந்த மின்சார வேலிகளுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு பற்றிக்களை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
