இந்திய பிரதமர் மோடி சூட்டிய பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
சந்திரயான்-3-ன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
விக்ரம் லேண்டர்
அப்போது இஸ்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை வெகுவாகப் பாராட்டி இருந்தார்.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் திகதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்ததுடன் நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி எனவும் பிரதமர் பெயர் சூட்டினார்.
இந்த நிலையில், கோள்களுக்கு பெயர் சூட்டும் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு, பிரதமர் மோடி சூட்டிய“ சிவசக்தி” என்ற பெயரை தற்போது அங்கீகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
