யாழ். கலாசார மையத்தின் திடீர் பெயர் மாற்றம்: விக்னேஸ்வரன் விசனம்
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தின் திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணத்தை உரிய தரப்பு விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சிறு குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“யாழ். குடாநாட்டு மக்கள் வழியாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய கொடை யாழ். கலாசார நிலையம். இது, இதுவரை 'யாழ்ப்பாணம் கலாசார நிலையம்' என்றே அழைக்கப்பட்டது.
தூதரகத்தின் மீதே பொறுப்பு
'திருவள்ளுவர் கலாசார மையம்' என்று பெயர் மாற்ற உங்களைத் தூண்டியது எது? தமிழ் மொழிக்கு ஏன் தாழ்வு நிலை? பதினாறாவது திருத்தத்தின் கீழ் தமிழ் மொழி (வடக்கு, கிழக்கில்) முதன்மையானதாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய (பெயர்) மாற்றத்தை அரசாங்கம் செய்திருந்தால் அவர்கள் இதை (தமிழ் முன்னிலைப்படுத்தப்பட்டதை) அறிந்திருப்பார்கள். அமைச்சர் சந்திரசேகர், இந்த மாற்றம் பற்றி தெரியாது என்று மறுத்துள்ளார்.
எனவே, மாற்றத்திற்கான பொறுப்பு தூதரகத்தின் அலுவலகத்தின் மீதே விழுகின்றது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |