யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள்
நாடளாவிய ரீதியாகச் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவதை ஊக்குவிக்கும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 14 வருடங்களாகத் தொடர்ச்சியாக நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இந்த முறையும் கோளாகளமாக நடைபெறவுள்ளதோடு, இந்த வருடத்திற்கான நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வர்த்தக கண்காட்சியில் வடக்கின் முக்கிய சுற்றுலா மையமான, கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நூற்றுக்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
வியாபார ஏற்பாடு
இதற்கு மேலதிகமாக கண்காட்சியை பார்வையிடவரும் மக்களுக்கு விற்பனைக்காகவும் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக ஒருங்கிணைந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட காடை முட்டை, கோழிமுட்டை, வாத்து முட்டை இறைச்சி வகைகள் பசுமைக்களான், காளான் வத்தல், காளான் தேநீர் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு, அனைத்து மக்களுக்கும், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |