விஜித ஹேரதின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை: இம்ரான் எம்.பி கேள்வி
அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற முஸ்லிம்களுக்கு அனுபவம் போதாமையினாலேயே அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் அங்கு தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவான 159 பேரில் எத்தனை பேர் கடந்த கால நாடாளுமன்ற அனுபவங்களைப் பெற்றவர்கள்?
கடந்த கால அமைச்சு
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுள் எத்தனை பேர் கடந்த கால அமைச்சு அல்லது பிரதியமைச்சு அனுபவம் பெற்றவர்கள் என்பதை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் ஒரு சிலரைத்தவிர ஏனைய அனைவரும் புதியவர்கள் தான். அவர்களுள் பலருக்குத்தான் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல குறைந்த பட்சம் முஸ்லிம் ஒருவருக்கும் அமைச்சு வழங்கியிருக்கலாம். இதனை வழங்குகின்ற மனநிலை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |