எதிர்வரும் நாட்கள் கடினமானதாக இருக்கும்! அமைச்சர் தகவல்
இலங்கையின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுகி்ன்றது. விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
நாட்டின் நலன்
ஒரு குடும்பமாக உழைக்கும் போது, குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். குடும்ப நலமே தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.
அவ்வாறே நாட்டின் நலன் கருதி எடுக்கும் தீர்மானங்கள் சில நேரம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதனை பழகிக் கொள்ள வேண்டி வரும். அது குறித்து யாரும் தப்பான அபிப்பிராயங்களை மேற்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
