முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா இன்று நீதிமன்றில் முன்னிலை
சட்ட விரோதமான முறையில் வாகனமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா(Gamini Vijith Vijithamuni Soysa) இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா(Gamini Wijith Wijithamuni Zoysa), பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் றேற்றையதினம்(19) கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்கள் கொண்டு பொருத்தப்பட்ட ட்ரக் வண்டியொன்று, கடந்த மாதம் ஹப்புத்தளையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
அதனையடுத்து குறித்த வண்டியின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் கடந்த 14ஆம் திகதி பாணந்துறை வலான மோசடித்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணையின் இடையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டு, இன்றையதினம்(20) அவரை மீண்டும் வலான மோசடித்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan