விஜயகுமாரதுங்க இன்று உயிருடன் இருந்திருந்தால் கடலில் குதித்திருப்பார் - சந்திரிகா
விஜயகுமாரதுங்க இன்று உயிருடன் இருந்திருந்தால், நாடு இன்று ஆட்சி செய்யப்படும் நிலையைப் பார்த்து கடலில் குதித்திருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விஜய குமாரதுங்கவின் 33 நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டுக்கு இன்று இளம் மற்றும் கல்வியறிவுக்கொண்ட மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் அவசியம் என்று சந்திரிகா குறிப்பிட்டார்.
விஜயகுமாரதுங்க எதிர்பார்த்த நிலையை நாடு இன்று அடைந்துவிட்டதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சந்திரிகா, இதற்கு பதிலளிப்பதை விட சிரிக்கவே முடியும் என்று தெரிவித்தார்.
அபிவிருத்தி செய்யப்படும் போது நாட்டை சிலர் நாசமாக்கி விடுகின்றனர்.எனவே அரசியலில் புதிய இளம் தலைமைகள் அவசியம் என்று சந்திரிக்கா குறிப்பிட்டார்.
நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் குறித்த சரியான அறிவு இல்லை. இந்தநிலையில், நாடு இன்று சீனாவின் குடியேற்ற நாடாக மாறிவிட்டது என்றும் சந்திரிக்கா தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அபிவிருத்திப் பணிகளை வழங்கும் போது எதிர்ப்பவர்கள் சீனாவுக்கு வழங்கப்படும் எதற்கும் எதிர்ப்பதை வெளியிடுவதில்லை என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.




