லக்ஷ்மன் கிரியெல்ல மீது நீதியமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று(18.01.2023) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தம்மை விமர்சித்ததாக கிரியெல்ல தெரிவித்த கருத்து தொடர்பிலேயே விஜயதாச ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தீவிரமான பிரச்சினை
இது ஒரு தீவிரமான பிரச்சினை என்று குறிப்பிட்ட அவர், தமது தொலைபேசி உரையாடல்களை அவர் ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
தனக்கு எதிராக சேறு பூசும் பிரசாரத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறை கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சருடன் தொடர்கொண்டமை எப்படி
தெரியவந்தது என்று, சபாநாயகர், லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கேட்டபோது, லக்ஷ்மன் கிரியெல்ல, அதற்கு பதிலளிக்கவில்லை.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
