பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ச
விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை (25) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
மக்கள் கூட்டணி
மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே.
உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அம்மாற்றத்தை உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
