விஜய் பதவி விலகப் போகும் தொகுதி எது..! தவெகவின் தீர்மானம் குறித்து தீவிரமடையும் எதிர்பார்ப்பு
தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் எந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் வரலாறு கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை மையமாக வைத்தே சுழன்று வந்தது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜயால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் இந்த இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியாக அமைந்தது.
அதிக வாக்குகள்
தவெக தலைவர் விஜயின் நிகழ்ச்சிகளுக்கு வந்த கூட்டம் இந்தியாவையே அதிரவைத்த நிலையில், அக்கட்சி அதிக அளவிலான வாக்குகளை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சி சார்பில் 233 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்கிடையில், தேர்தலுக்கு பின்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூட திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தவெக 30 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றே கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸுடன் இணையும் தவெக! பரபரப்புக்கு மத்தியில் விஜயின் 15 நிமிட உரையாடல் - 59 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி ஆட்சிமாற்றம்
பெரம்பூரா.. திருச்சி கிழக்கா..
இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த சூழலில் அவர் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலையில், அது எந்த தொகுதி என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் திருச்சி கிழக்கை விட பெரம்பூர் தொகுதியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரம் திருச்சி கிழக்கு தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ளதால் அதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில் விஜய் எந்த தொகுதியை தேர்ந்தெடுப்பார் என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அது திருச்சி கிழக்கை விட தவெகவுக்கு பாதுகாப்பான தொகுதியாக உள்ளது.
இதனால் விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்தே பதவி விலகி செய்து அந்த தொகுதியில் தனது கட்சியை சேர்ந்த முக்கிய நபரை வேட்பாளராக அறிவிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே இரவில் விஜயின் இல்லத்திற்கு விரைந்த முதலமைச்சருக்கான Convoy வாகனங்கள்! தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்