காங்கிரஸுடன் இணையும் தவெக! பரபரப்புக்கு மத்தியில் விஜயின் 15 நிமிட உரையாடல் - 59 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி ஆட்சிமாற்றம்
தமிழ்நாட்டு சட்டப் பேரவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தனது முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இருப்பினும், தவெகவிடம் தற்போது 108 இடங்கள் மட்டுமே இருப்பதால் தொங்கு சட்டசபை நிலவரம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், மக்களவையில் 12ஆவது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி விஜயை தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "நான் விஜய்யிடம் பேசி, தவெகவின் இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
ராகுல் காந்தியுடன் உரையாடல்
இந்த மக்கள் ஆணை, புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கப்படவும் கூடாத இளைஞர்களின் எழுச்சிமிக்க குரலைப் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் பாதுகாப்பிற்காகவும் சேவைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு மாத்திரம் இல்லாமல், விஜயிடம் ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு 15 நிமிடங்கள் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டணி ஆட்சி..
ராகுல் காந்தியுடனான உரையாடலின் போது, மிக முக்கியமான விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும், இதன்போது விஜய், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் நான் இன்னும் உறுதியாக இருக்கின்றேன் என குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தமிழக வரலாற்றில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைவிடக் குறைவாக இருப்பதால், பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் கூட்டணி இல்லாமல் தனித்து களம் இறங்கியது. தற்போது அதிக இடங்களைக் கைப்பற்றியும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விடக் குறைவாகவே உள்ளது.
மிகப்பெரிய மாற்றம்
விஜய், காங்கிரசுக்குக் கூட்டணியில் இடம் அளித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் TVK தரப்பில், "நாங்கள் சொந்தமாக ஆட்சியமைக்கும்போது கூட்டணி தேவையில்லை" என்று கூறியுள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, மூன்றாவதாக ஒரு கட்சி தனித்து அதிக இடங்களைப் பிடித்து, கூட்டணி அரசுக்கு வித்திட்டுள்ளது.
1967இற்குப் பிறகு, திமுக - அதிமுக அல்லாத ஒரு கட்சி, ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதாலும், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததாலும், கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகியுள்ளது.
59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றமாக, கூட்டணி அரசு அமையும் சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், 1952ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இதுவே தமிழ்நாட்டின் முதல் கூட்டணி ஆட்சி முயற்சியாகக் கருதப்படுகிறது.