மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்..! தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி பெற்றதை தொடர்ந்து சான்றிதழ் வாங்கிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சேப்பாக்கம் தொகுதியில் என்னை இரண்டாவது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாளை சட்டமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஸ்டாலின் வழியில் செயல்படுவோம். வெற்றிக்காக உழைத்த திமுகவினருக்கு நன்றி. மக்கள் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கும், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.