கரூருக்கு விரையும் விஜய்.. அதிரடியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்
கரூரில் இடம்பெற்ற விஜயின் பேரணியில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை 20 பேர் கொண்ட குழு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவெக தலைவர் விஜய், குறித்த மக்களை காண செல்வதற்கான ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ள 20 பேர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இன்று இரவு வரை அவதானமாக இருங்கள்..! வவுனியா - முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு
விசேட குழு
இச்சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து விஜய் ஒரு காணொளியினையும் வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வெளியிட்டதுடன் அவர்களின் பாதுகாப்பு கருதியே நேரில் பார்வையிட செல்லவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் தற்போது, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டது.
விஜயின் உறுதிப்பாடு
இந்த நிலையில், கரூர் செல்ல வேண்டும் என்பதில் தவெக தலைவர் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளை, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையிலேயே இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், தவெகவிற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



