தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாக விஜய் சூளுரை
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கப் போவதாக தமிழக முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது விஜய் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தனது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகள்
திராவிட கட்சிகள் போன்று அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு ஈழத்தமிழர்களை ஏமாற்றால் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த நிலையில், முதன்முறையாக விஜய் தனது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்கள்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தமிழ்நாட்டில், குறிப்பாக நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களிடையே உணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், நமது தொப்புள் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்கள், அவர்கள் இலங்கையில் இருந்தாலும் சரி அல்லது உலகில் வேறு எங்கு இருந்தாலும் சரி, தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து துன்பப்படுகிறார்கள்," என்று விஜய் தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பது தமது கடமை என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார் இலங்கைத் தமிழர்களுக்கு விஜய் தனது ஆதரவைக் காட்டுவது இது முதல் முறை அல்ல. 2008 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்உறுப்பினர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து சென்னையில் நடந்த உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் பிரபாகரனைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்தது என்று விஜய் வலியுறுத்தியுள்ளார் அத்துடன், கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் திமுக அரசைப் போல, தாம் இல்லை என்றும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தமது முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும் என்று அவர் நாகப்பட்டினக்; கூட்டத்தில் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: அமல்



