தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார். இதன்போது, 113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என மற்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜயிடம் ஆளுநர் கூறியது என்ன? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மை தவெகவுக்கு இல்லை. தேவையான பெரும்பான்மை இருப்பதை தவெக தலைவர் விஜய் நிறுவவில்லை.
தவெக ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை தேவை என ஆளுநர் அர்லேகர் விஜயிடம் கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து, ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் விஜய்யை அழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எனவே இன்று காலை 11 மணியளவில் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்திருந்தார்.
சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள்
113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இதையடுத்து விஜய் புறப்பட்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்பின் தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this