விஜய் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசவில்லை தெரியுமா..!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆற்றியிருந்த உரையை - கோடிக்கணக்கான தமிழர்கள் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விரும்பியோ விரும்பாமலோ - ஆர்வத்துடனோ அல்லது பிழைகண்டு பிடிப்பதற்காகவென்றோ - கிட்டத்தட்ட அனைத்து தமிழர்களுமே விஜயின் உரையை உன்னிப்பாககக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தமிழ் நாட்டிலுள்ள இளைஞர்களைப் போலவே விஜயின் அன்றைய அந்த உரையை உலகத் தமிழர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
புலம்பெயர் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் - குறிப்பாக இளம் தலைமுறையினர் - விஜயின் தீவிர ரசிகர்கள் - விஜய் என்ன பேசப்போகின்றார் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை.
ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு கண் அசைவைக்கூட அவர் தனது அந்த மாநாட்டில் காண்பிக்கவில்லை. ஏன் என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



