தமிழக அரசியலில் எம்ஜிஆரை பின்பற்றும் விஜய்: அரசியல் பரப்பில் எழுந்துள்ள கேள்விகள்
தமிழக நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள், முன்னாள் நடிகர்களாக இருந்து பின்னர் முதலமைச்சர்களாக உயர்ந்த எம்.ஜி.ராமசந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 10ஆம் மற்றும் 12 ஆம் தரங்களில் சித்திபெற்ற மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வை இன்று (28) விஜய் நடத்தியுள்ள நிலையிலேயே இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது.
அரசியல் வெற்றி
தமிழ் நாட்டை பொறுத்தவரையில் அரசியலுக்குள் வருவதற்கு சினிமா ஒரு ஊடகமாகவே இருந்து வருகிறது
எனினும் இந்த சினிமாவை பயன்படுத்தி அரசியலில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மாத்திரமே முன்னிலைப்பெற்றனர்.
நடிகர் திலகம் என்று கூறப்பட்ட சிவாஜி கணேசன் மற்றும் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் கலவையான முடிவுகளுடன் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
சொந்தக் கட்சியை உருவாக்கினாலும் தனது சினிமா கவர்ச்சியை அரசியல் வெற்றியாக மாற்ற கணேசன் போராடினார். மறுபுறம், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார், ஆனால் மூலோபாய தவறான நடவடிக்கைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பின்னடைவைச் சந்தித்தார்.
மற்றொரு நடிகரான சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி, ஜெயலலிதாவின் தயவுடன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சீமான் தனது நாம் தமிழர் கட்சியுடன் வாக்காளர் தளத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறார்.
எனினும் அவரின் அரசியல் உயர்வு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றே கூறப்படுகிறது.
நலத்திட்டங்கள்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கினார், ஆனால் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த போராடி இறுதியில் திமுகவுடன் இணைந்தார்.
மன்சூர் அலிக்கானும் இன்னும் கத்துக்குட்டியாகவே செயற்பட்டு வருகிறார். இதேவேளை அரசியலுக்கு வருவதற்கான ரஜினிகாந்தின் உறுதியற்ற தன்மைக்கு மாறாக, நடிகர் விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் தமது மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார்.
2009 ஆம் ஆண்டு மக்கள் நல அமைப்பாக நிறுவப்பட்டது, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி சார்ந்த திட்டங்களில் அந்தக்கட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று விஜய் வெற்றி பெறுவாரா அல்லது விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன் போன்ற சவால்களை எதிர்கொள்வாரா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளதாக தமிழக அரசியல் தரப்புக்கள் குறிப்பிடுகின்றன.
அல்லது ரஜினிகாந்த் போல் அரசியலில் இருந்து விலகிக்கொள்வாரா? என்ற கேள்விகளே தமிழக அரசியல் பரப்பில் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம் : கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |