கரூர் மக்களை சந்திக்கவுள்ள விஜய்! வெளியான முக்கிய தகவல்
தமிழக வெற்றிக்கழகத்தின் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் , செப்டம்பர் 27 ஆம் திகதி நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கரூரில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் காணொளி அழைப்பில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு குடும்பத்திடமும் பேசியுள்ளார்.
மேலும் வழக்கு விசாரணை சென்று கொண்டு இருப்பதால், தன்னால் வர முடியவில்லை என்றும், கரூர் துயரத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
காணொளி ஆதாரம்
விஜய் வீடியோ அழைப்பில் பேசியதற்கான காணொளி ஆதாரங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கூடிய விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக உறுதி கூறிய தவெக தலைவர் விஜய், வரும் அக்டோபர்13 ஆம் தேதி திங்கள்கிழமை கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடிவு செய்து உள்ளார்.அதற்கான ஏற்பாடுகள் கரூரில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நேரில் சந்திப்பு
பாதிக்கப்பட்ட மக்களை தனித்தனியாக அவர்களது வீடுகளுக்குச் சென்று சந்திக்காமல், அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அப்படி பாதிக்கப்பட்ட மக்களை, மண்டபத்தில் வைத்து சந்திக்கும் போது, பொதுமக்கள், தொண்டர்கள், ஊடகங்களுக்கு என யாருக்கும் அனுமதி இல்லை.
மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 5 பேர் மட்டுமே வர அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் விஜய்யின் வாகனம் செல்லும் நேரத்தில், அதன் பின்னால் யாரும் வரவும் அனுமதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
அப்படி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் விஜய், ஏற்கனவே அறிவித்த நிவாரணத் தொகையை நேரில் வழங்கவும் முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
