உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நிசாம் காரியப்பரின் பரபரப்பு தகவல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்நிலை நியமனக் குழுவில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இந்தவிடயத்தை ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல்தாரிகளை கண்டு பிடித்து தண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல்களின் போது வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
எமது ஊடகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் உட்பட பல முக்கியமான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..




