தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு: விக்னேஸ்வரன்
உண்மைகளை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவதே கஜேந்திரகுமாரின் குறைபாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா செல்லக் காரணம்
கடந்த வாரம் விக்னேஸ்வரன் இந்தியா சென்றமை, அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காகத் தான் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்ததாக விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதில் அளித்த விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாரிடம் உள்ள குறைபாடு தான் நினைத்த மாதிரி பேசுவதே.
ஆகவே நான் இந்தியா சென்றது, ஒரு மாநாடு ஒன்றில் உரையாற்றுவதற்காகவே சென்றேன். எந்த ஒரு அரசியல் சந்திப்புக்கும் செல்லவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
