நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் ட்ரம்ப் - வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் என வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மரியா கரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் துணிச்சலான முடிவுகளுக்கு
வெனிசுவேலாவில் ஜனநாயகம் மலரவும், நிக்கோலஸ் மதுரோவின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் "மனிதநேயத்திற்கான ஒரு மிகப்பெரிய மைல்கல்" என்று மரியா கரினா மச்சாடோ பாராட்டியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு தான் வென்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"ட்ரம்ப் செய்துள்ள காரியங்கள் உலகிற்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லியுள்ளன. அவர் இந்தப் பரிசைப் பெறுவதற்கு முழு உரிமையுடையவர் என்பதை அவரது செயல்கள் நிரூபித்துள்ளன," என்றார்.
வெனிசுவேலா மக்கள் சார்பாக ட்ரம்ப்பின் துணிச்சலான முடிவுகளுக்குத் தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட தலையீடு காரணமாகவே வெனிசுவேலாவில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டதாக மரியா கரினா மச்சாடோ இந்த நேர்காணலில் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam