வடக்கு ஆளுநரின் தவறை சுட்டிக்காட்ட விக்னேஸ்வரன் தவறிவிட்டார்! சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு
நியதி சட்ட உருவாக்கம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தவறிவிட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (22.04.2023) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
நியதி சட்டம் சட்டம்
குறிப்பிட்ட கலந்துரையாடலின் போது பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது வடக்கு மாகாண
ஆளுநரால் அண்மையில் உருவாக்கப்பட்ட நியதி சட்டம், சட்டத்துக்கு விரோதமானது என
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நேரடியாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் பிழையாக செயற்பட்டு விட்டீர்கள், அங்கு அவ்வாறு குறிப்பிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




