மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தர கோரி தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(Video)
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி நான்காவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேய்ச்சல் தரை அபகரிப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழடை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும், இன்றைய தினம்(18.09.2023) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.










