யாழில் மலையக மக்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
''மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்'' என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில்
இன்று (20.05.2023) யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மலையக மக்களின் இருநூறாவது ஆண்டை நோக்கி சர்வமத வழிபாடுகளும், மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மலையக மக்களின் சுதந்திரம்
இதேவேளை "மலையக மக்களை சிதைக்க வேண்டாம்", "பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே" , மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணிக்கொடு" தோட்டா வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்" , வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி", போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May you like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
