மலையக மக்களின் 200 வருட வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம் (Video)
மலையக மக்களின் 200 வருட வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் “மலையகம் 200” எனும் தொனிப்பொருளில் அருங்காட்சியகம் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்பன நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
குறித்த அருங்காட்சியகம் நாளைய தினம் (19.05.2023) ஆரம்பமாகி தொடர்ந்து 20ஆம் 21ஆம் திகதிவரை 3 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் ஏற்பாடு தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பொ.முத்துலிங்கத்துடன் எமது ஊடக பிரிவு வினவியபோது,
மலையக சமூகம் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு மலையக மக்கள் ஆற்றும் பங்குகள் பற்றியும் அருங்காட்சியகத்தில் காணலாம். இந்த அருங்காட்சியகத்தின் போது சிறப்பு மாநாடு ஒன்றும் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.